திருவாரூரில் கோவிலுக்குள் புகுந்த லாரி: இடிந்த கோவில் சுவாமி சிலை!
கட்டுப்பாட்டை இழந்து கோவிலுக்குள் புகுந்த லாரி காரணமாக சுவாமி சிலை இடிந்தது.
By : Bharathi Latha
திருவாரூர் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் அருகே அமைந்துள்ள அய்யனார் கோவிலில் வேகமாக வந்த லாரி ஒன்று மோதி சுவாமி சிலை மற்றும் கோயிலும் சேதமாகி உள்ளது. மேலும் இந்த அய்யனார் கோவில் சாலையின் ஓரத்தில் சிறிய கோயிலாகவே அமைந்துள்ளது. மேலும் இது அறநிலையத்துறையின் கீழ் இருக்கின்ற கோவில் என்றும் கூறப்படுகிறது. அடிக்கடி இந்த பகுதிகளில் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அங்குள்ள ஊர் பொது மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
வேகமாக அதிக அளவில் உப்பு லோடு ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்திற்கு செல்வதற்காக வந்த லாரி ஒன்று கோவிலுள் புகுந்தது. லாரி புகுந்த வேகத்தின் காரணமாக லாரியை ஓட்டி கொண்டு வந்த டிரைவருக்கு பலத்த அடிபட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள ஊர் பொதுமக்கள் உதவியுடன் அவர் தற்போது அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று விபத்து நடைபெறுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் லாரி ஓட்டுநர் உறவினர்கள் குறித்த தகவல்களும் தற்போது தேடப்பட்டு வருகிறது. கோவில் முழுவதுமாக இடிக்கப்பட்டு சுவாமி சிலை குறிப்பாக அய்யனார் சிலை தற்போது தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள ஊர் பொதுமக்கள் அனைவரும் கூட்டமாக வந்து இந்த சம்பவத்தை பார்த்து செல்கிறார்கள். காரணம் இது ஏதேனும் தீய அறிகுறியின் முன்னெச்சரிக்கையாக இருக்குமே என்பது குறித்து அவர்கள் தற்போது பயத்தில் உள்ளார்கள்.
Input & Image courtesy: Polimar News