ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்ட தூத்துக்குடி சி.எஸ்.ஐ பிஷப் சஸ்பெண்ட்!

By : Kathir Webdesk
சர்ச் ஆஃப் சவுத் இந்தியா தூத்துக்குடியின் பிஷப் தேவசகாயம், சிஎஸ்ஐ ஆயர் சபையால் புதன்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டார்.
குற்றவியல், நேர்மையற்ற, ஒழுக்கக்கேடான பழக்கவழக்கங்கள் தொடர்பான சிஎஸ்ஐ விதிகளின் படி இந்த இடைநீக்கம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிஎஸ்ஐ நிர்வாகி தர்மராஜ் ரசலம் தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டில் தகுதியான பல வாக்காளர்களை நீக்கி மறைமாவட்டத் தேர்தலை சிதைக்க முயன்றபோது பிஷப் குற்றச்சாட்டில் சிக்கினார். இது மாவட்டத்தில் பரவலான உள்ளூர் கிளர்ச்சி மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு வழிவகுத்தது. அவர் மீதான புகார்கள் குவிந்தன, தேர்தலுக்குப் பிறகு தூத்துக்குடி-நாசரேத் மறைமாவட்டத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளுடன் ஒருங்கிணைக்க அவர் மறுத்துவிட்டார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிககளை நிர்வாகம் செய்யவிடாமல் பிஷப் தேவசகாயம் இடையூறாக இருப்பதாகவும், தனது பதவியை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் புதிய நிர்வாகிகள் தென்னிந்திய திருச்சபையின் தலைமையிடமான சினாட்டில் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தென்னிந்திய திருச்சபையின் நீதிமன்றத்தில்விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பிஷப் தேவசகாயத்தை தற்காலிகமாக நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கபட்டது.
Inputs From: Newindianexpress
