தூத்துக்குடி: கொரோனா விதிகளை மீறியதாக ரூ.5 லட்சம் அபராதம்.!
வரும் காலங்களில் விதிமுறைகளை மீறுபவர்களிடம் அபராதத்தொகை வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதே போன்ற நிலைதான் மற்ற மாவட்டங்களிலும் தொடர்ந்து வருகிறது.
By : Thangavelu
தமிழகத்தில் கொரோனா விதிமுறைகளை மீறுபவர்களிடம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முககவசம் மற்றும் பொது இடங்களில் எச்சில் துப்புதல் உள்ளிட்டவற்றுக்கு அபராதத் தொகை வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் முககவசம் அணியாத 2,587 நபர்களிடம் ரூ.5. 17 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இது பற்றி தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்:, மாவட்டத்தில் ஒரே நாளில் பொது இடங்களில் முககவசம் அணியாத 659 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 220 பேர் மீதும், திருச்செந்தூர் 442 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் 300 பேர் மீதும், மணியாச்சி 181 பேர் மீதும், கோவில்பட்டி 357 பேர் மீதும், விளாத்திகுளம் 253 பேர் மீதும், சாத்தான்குளம் 175 பேர் என மொத்தம் 2,587 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.5,17000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
வரும் காலங்களில் விதிமுறைகளை மீறுபவர்களிடம் அபராதத்தொகை வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதே போன்ற நிலைதான் மற்ற மாவட்டங்களிலும் தொடர்ந்து வருகிறது.வரும் காலங்களில் விதிமுறைகளை மீறுபவர்களிடம் அபராதத்தொகை வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதே போன்ற நிலைதான் மற்ற மாவட்டங்களிலும் தொடர்ந்து வருகிறது.