இங்கிலாந்தில் இருந்து மதுரை வந்தவர்கள் மாயம்.. தேடும் பணியில் சுகாதாரத்துறை.!
இங்கிலாந்தில் இருந்து மதுரை வந்தவர்கள் மாயம்.. தேடும் பணியில் சுகாதாரத்துறை.!

இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் லண்டனில் இருந்து மதுரை வந்த சிலர் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் புதிய வீரியமிக்க கொரோனா வைரஸ் பாதிப்புகள் கண்டறயிப்பட்டுள்ளது உலக நாடுகளிடையே பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.
இதனை தொடர்ந்து இங்கிலாந்தில் வரும் விமான சேவைகளுக்கு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்தவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்தில் இருந்து மதுரை வந்த 80 பேரில் 76 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள 4 பேரை தனிமைப்படுத்த அவர்களது முகவரியை அணுகியபோது அவர்கள் தவறான முகவரியை கொடுத்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
இதனால் மாயமான 4 பேரை சுகாதாரத்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.