WONDERLA சென்றவர்கள் வேன் விபத்து.. 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி.. கிருஷ்ணகிரியில் பயங்கரம்.!
WONDERLA சென்றவர்கள் வேன் விபத்து.. 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி.. கிருஷ்ணகிரியில் பயங்கரம்.!
By : Kathir Webdesk
கிருஷ்ணகிரி அருகே அரசுப் பேருந்து மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோ மாவட்டம், பவானியை சேர்ந்த 8 பேர் கொண்ட குழு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒண்டர்லா சுற்றுலா தளத்திற்கு செல்வதற்காக ஆம்னி வேன் மூலம் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேன் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
அப்போது சாலையோரத்தில் அரசு பேருந்து ஒன்று பயணிகளை இறக்கிவிடுவதற்காக நின்றுள்ளது. பேருந்தில் இருந்த பயணிகள் கீழே இறங்கி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஆம்னி மோன் அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது. அப்போது பேருந்தில் இருந்து இறங்கிய தேவராஜ் என்பவரும், ஆம்னி வாகனத்தில் வந்த பிரசாந்த், லிங்கா, சுரேந்தர், சிவகுமார் மற்றும் ஓட்டுநர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த காவேரிப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இறந்தவர்களை சடலங்களை ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலமாக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், உயிருக்கு போராடியவர்களும் மற்றொரு ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.