Begin typing your search above and press return to search.
சேமித்த பணத்தை திருடியதாக பிச்சைக்காரர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார்.!
திருடிச்சென்ற நபர்கள் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிச்சை எடுத்து வரும் முதியவரிடம் பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By : Thangavelu
திருப்பத்தூரில் பிச்சை எடுத்து சேமித்து வைத்திருந்த பணத்தை அடையாளம் தெரியாத நபர் திருடிசென்றுவிட்டதாக முதியவர் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாரியம்மன் கோயில் பகுதியில் பிச்சைமணி என்பவர் பிச்சை எடுத்து வருகிறார். அவர் அதே கோயிலில் இரவு தங்கியுள்ளார். அப்போது நல்ல தூங்கிக்கொண்டிருந்த போது தன்னுடைய சேமிப்பு பணத்தை 2,000 ரூபாய் பணத்தை அடையாளம் தெரியாத நபர் திருடி சென்றுவிட்டதாகவும், பணத்தை கண்டுப்பிடிச்சு தருமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும், திருடிச்சென்ற நபர்கள் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிச்சை எடுத்து வரும் முதியவரிடம் பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
