Kathir News
Begin typing your search above and press return to search.

திருப்பூரில் மசூதியை இடிக்க உத்தரவிட்ட கோர்ட் - குறுக்கே பாய்ந்து தடுக்கும் தி.மு.க எம்.எல்.ஏ!

திருப்பூரில் மசூதியை இடிக்க உத்தரவிட்ட கோர்ட் - குறுக்கே பாய்ந்து தடுக்கும் தி.மு.க எம்.எல்.ஏ!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 July 2022 1:19 AM GMT

திருப்பூர் வேலம்பாளையம் மகாலட்சுமி நகர் பகுதியில் மசூதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் இஸ்லாமியர்கள் 5 வேளை தொழுகை நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் அனுமதி பெறாமல் இந்த பள்ளிவாசல் செயல்படுவதாகவும் அதை மூட வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதை அடுத்து மசூதியை மூட கோர்ட் உத்தரவிட்டது. உத்தரவின் பேரில் போலீசார், அரசு அதிகாரிகள் மசூதிக்கு சீல் வைப்பதற்காக சென்றார்கள். ஆனால் அங்கு பள்ளிவாசலில் இருந்த இஸ்லாமியர்கள் பள்ளிவாசலை சீல் வைக்க அனுமதிக்கவில்லை. பள்ளி வாசலுக்குள் இருந்துகொண்டு போராட்டம் நடத்தினார்கள். போலீசார் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி சீல் வைக்க முயன்றார்கள்.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தினால், இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த மக்களிடம் பதட்டமான சூழல் உருவாகும் என திருப்பூர் தெற்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News