திருவள்ளூர்: கோயில் குளத்திற்கு சென்ற 5 பேர் மரணம்.!
திருவள்ளூரில் கோயில் குளத்திற்கு துணி துவைக்க சென்ற தாய், மகள் உட்பட 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By : Thangavelu
திருவள்ளூரில் கோயில் குளத்திற்கு துணி துவைக்க சென்ற தாய், மகள் உட்பட 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர், கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் சுமதி, இவர் தனது 15 வயது மகள் அஸ்விதாவுடன் அங்கு உள்ள அங்காளம்மன் கோயில் குளத்திற்கு துணை துவைக்கச் சென்றுள்ளார். அப்போது அவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த ஜோதிலட்சுமியுடன், சிறுமிகள், ஜீவிதா, நர்மதாவும் குளத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது சிறுமிகள் மூன்று பேரும் குளத்தில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தபோது, ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து நீரில் மூழ்கி சிறுமிகள் தத்தளித்துள்ளனர். இதனை பார்த்த சுமதியும், ஜோதிலட்சுமி காப்பாற்ற சென்றபோது ஆழமான பகுதியில் மூழ்கி இறந்துள்ளனர்.
இது பற்றி தகவல் கிடைத்த போலீசார் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினருடன் சென்று உயிரிழந்த 5 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் இன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
