Kathir News
Begin typing your search above and press return to search.

சைக்கிள் திருடு.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ட்விட்டரில் டேக் செய்த இளைஞர்.!

திருவள்ளூர் மாவட்டத்தில் விலையுயர்ந்த சைக்கிள் ஒன்று திருடு போனதாக இளைஞர் ஒருவர் முதலமைச்சருக்கு ட்விட்டரில் புகார் அளித்துள்ளார்.

சைக்கிள் திருடு.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ட்விட்டரில் டேக் செய்த இளைஞர்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  14 July 2021 9:55 AM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் விலையுயர்ந்த சைக்கிள் ஒன்று திருடு போனதாக இளைஞர் ஒருவர் முதலமைச்சருக்கு ட்விட்டரில் புகார் அளித்துள்ளார்.

திருவள்ளூரைச் சேர்ந்தவர் அர்சத் அஜ்மல். இவர் ரயில் நிலையம் அருகே வசித்து வருகின்றார். இவர் விலையுயர்ந்த சைக்கிள் ஒன்றை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். கடந்த 2ம் தேதி வீட்டின் அருகே அவரது சைக்கிளை நிறுத்தி இருந்த போது ஒரு இளைஞர் அதனை திருடி செல்லும் வீடியோவையும் ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை டேக் செய்து வெளியிட்டுள்ளார்.


இந்நிலையில், இது பற்றி வழக்குப்பதிவு செய்த திருவள்ளூர் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் இன்று தங்களது ட்விட்டர் பக்கத்தில் திருடப்பட்ட சைக்கிளை கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

போலீசார் வெளியிட்டுள்ள பதிவில், திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், திருடப்பட்ட சைக்கிள் மீட்கப்பட்டுவிட்டது என பதிவிட்டுள்ளனர். அது மட்டுமின்றி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சருக்கும் இந்த பதிவு டேக் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News