திருவள்ளூர்: 2 கோடிக்கு மண்ணுளி பாம்பை விற்க முயன்றவர்கள் கைது.!
திருவள்ளூர்: 2 கோடிக்கு மண்ணுளி பாம்பை விற்க முயன்றவர்கள் கைது.!
By : Kathir Webdesk
திருவள்ளூர் அருகே 2 கோடி ரூபாய்க்கு மண்ணுளி பாம்பை விற்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரில் ரகசியமாக மண்ணுளிப் பாம்புகளை வெளிநாட்டிற்கு கடத்தி விற்கப்போவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்து. இந்த தகவலை தொடர்ந்து தனி பிரிவினர் நடத்திய விசாரணையில் மணவாளன் நகர் பகுதியில் விஜயகுமார், பொன்னையன், தங்கமணி என்ற மூன்று பேர் மண்ணுளிப் பாம்பை வளர்த்து வருவதாக தகவல் கிடைத்தது.
இந்த தகவலை தொடர்ந்து 3 பேரிடமும் மண்ணுளிப் பாம்பு வாங்குவது போன்று வனத்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இதில் உடன்பட்ட அந்த 3 பேரும் ரகசியமாக தனி இடத்திற்கு வருவதற்கு கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த 3 பேரும் 5 அடி உயர மண்ணுளி பாம்புடன் வந்துள்ளனர். இதனையடுத்து மறைந்திருந்த வனத்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து அவர்களிடம் இருந்த பாம்பை பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரையும் கைது செய்துள்ளனர்.