திருவண்ணாமலையில் விமான நிலையம்: சிவில் விமான போக்குவரத்துத்துறை பரிசீலனை.!
திருவண்ணாமலையில் விமான நிலையம் அமைக்க எம்.பி. அண்ணாதுரை மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

By : Thangavelu
ஆன்மீக தளமான திருவண்ணாமலையில் விமான நிலையம் அமைக்க மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை பரிசீலிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக நகரான திருவண்ணாமலைக்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும், வெளிநாடுகளிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். எனவே, பக்தர்களின் நலன் கருதி திருவண்ணாமலையில் புதியதாக விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று மக்களவையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்நிலையில், திருவண்ணாமலையில் விமான நிலையம் அமைக்க எம்.பி. அண்ணாதுரை மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனிடையே மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியதாவது: விமான திருத்த சட்ட மசோதாவில் பங்கேற்று, பல்வேறு கோரிக்கைகளை குறித்து பேசியதை மத்திய அரசு கவனத்துடன் கருத்தில் கொண்டிருக்கிறது.
எனவே சிறிய நகரங்களிலும் விமான நிலையம் அமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதே போன்று புன்னிய பூமியான திருவண்ணாமலையில் புதிய விமான நிலையம் அமைப்பது பற்றி மத்திய அரசு பரிசீலிக்கும் என கூறப்பட்டுள்ளது.
