அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வருடம்தோறும் கார்த்திகை தீபத் திருவிழா மிக பிரமாண்டமான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி தீபத்திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
By : Thangavelu
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வருடம்தோறும் கார்த்திகை தீபத் திருவிழா மிக பிரமாண்டமான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி தீபத்திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிலையில், இந்த வருடத்திற்கான தீபத் திருவிழா வருகின்ற 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணி முதல் 7.30 மணிக்கு மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர்ந்து 10 நாட்களும் தீபத் திருவிழா உற்சவம் நடைபெறும். இதனிடையே விழாவின் மிக உச்ச நிகழ்ச்சியாக வருகின்ற 19ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபமும், அன்று காலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.
இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக அதிகளவு மக்கள் கூடுகின்ற திருவிழாக்களை நடத்த தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை (அக்டோபர் 7) முதல் தினந்தோறும் 13 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறக்கப்படுகிறது. அந்த சமயத்தில் பக்தர்கள் அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும். இதற்கான இபாஸ் பெறுவதற்கான ஆன்லைனில் முன்பதிவு செய்ய இணையதளம் இன்று (அக்டோபர் 6) முதல் செயல்படத் தொடங்குகிறது. இந்த www.arunachaleswarartemple.tnhrce.in மற்றும் www.tnhrce.gov.in இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Source: Maalaimalar
Image Courtesy:Hindu Tamil