நடக்க வேண்டும்! இல்லையென்றால் பா.ஜ.க நடத்திக்காட்டும் - தருமபுரம் ஆதீன விவகாரத்தில் சீறும் அண்ணாமலை!

By : Kathir Webdesk
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் வைகாசி மாதம் நடைபெறும் குரு பூஜையின்போது, ஆதீன மடாதிபதியை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்வது மரபாகும்.
வருகின்ற மே மாதம் 22ஆம் தேதி பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி ஆதீனத்தில் நடைபெறுவதை தடை செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு திராவிடர் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தருமபுர ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான 'பட்டின பிரவேசம்' மீதான தடை, தமிழக நாகரிகம் மற்றும் கலாசாரத்திற்கு எதிரானது. ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சட்டவிரோத உத்தரவை எதிர்த்து நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறு ஆதினத்திடம் கோரிக்கை வைப்போம்.
கோபாலபுர குடும்பத்தை அவரது கட்சியினர் தூக்கிச் சுமப்பதைப் போல் அல்ல இது. ஊழியம் மற்றும் குருவுக்குச் செய்யும் சேவையில் உள்ள வேறுபாடுகளைக் கூட அறியாதவர் இந்த கோபாலபுர குடும்பத்தார். தமிழக பா.ஜ.க இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்டத் தயாராக இருக்கிறது என்றார்.
