தி.மு.க'வின் அடுத்த படமும் பிளாப் ஆனது - வீடு இல்லாமல் நிற்கும் வேலம்மாள் பாட்டி!
கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் அவர்கள் பயணத்தின் போது, வேலம்மாள் பாட்டிக்கு வீடு தருவதாக கூறி இன்றும் நிறைவேற்றாத நிலை
By : Bharathi Latha
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த 91 வயதானவர் வேலம்மாள் பாட்டி இரண்டாவது தொகுப்பாக கொரோனா நிவாரண நிதி ரூபாய் 2 ஆயிரத்தை பெறும் பொழுது அவருடைய அந்த சிரிப்பு, "புன்னகை புகைப்படம்" என தி.மு.க'வினரால் அப்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு மிகவும் பிரபலமடைந்தது. இதனை புகைப்படம் எடுத்த ஜாக்சன் என்பவர் சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படத்தை பதிவிட இது முதல்வர் ஸ்டாலின் அவர்களிடமும் சென்றது, உடனே முதல்வர் அவர்கள் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த காரணத்தால் வேலம்மாள் பாட்டி பிரபலமடைந்தார்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு முதல்வர் ஆய்வுக்கு சென்றார், அந்த சமயம் வேலம்மாள் பாட்டியை நேரில் வரவழைத்து அவர்களிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும் அவர்கள் தனக்கு முதியோர் பணம் வரவில்லை எனவும் தனக்கு சொந்த வீடு கட்டித் தாருங்கள் எனவும் கேட்டுள்ளார். இதனை முதல்வர் அவர்கள் ஏற்றுக் கொண்டதாக அப்போது செய்திகள் வெளியானது, இந்நிலையில் அந்த பாட்டி உருக்கமான வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பேசும் வேலம்மாள் பாட்டி, 'முதல்வர் ஐயா! அவர்களை நீங்கள் வீடு தரேன்னு சொன்னிங்க? ஆனா இதுவரைக்கும் எதுவும் தரல, நாங்கள் கலெக்டரிடம் சென்று அணுகினோம் ஆனால் அவரும் இது பற்றி சரியாக எதுவும் கூறவில்லை' என புலம்பி பேசியுள்ளார். இதுகுறித்து தி.மு.க தரப்பில் இருந்து அவர்கள் கூறியதாவது, 'வாய்மொழியாக மட்டுமே வாக்குறுதி கொடுத்ததாக, எழுத்துப்பூர்வமான வாக்குறுதி ஏதுவும் அந்த பாட்டிக்கு அளிக்க படவில்லை' என்று கூறியுள்ளனர்.
இரு தினங்களுக்கு முன்பு நரிக்குறவர் இனத்தை சேர்ந்த அஸ்வினி என்பவர் இதுபோல் முதல்வர் கூறியது நடக்கவில்லை என புகார் அளித்த நிலையில் தற்பொழுது இந்த வேலம்மாள் பாட்டியும் புகார் அளித்துள்ளது தி.மு.க'வின் நாடகங்களை அம்பலப்படுத்தி வருகிறது.
Input & Image courtesy: Oneindia News