தமிழக அரசியல் கட்சிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை.!
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இன்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
By : Thangavelu

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதே போன்று வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி எண்ணப்பட்டு அன்று முடிவுகள் அறிவிக்கப்படுகிறது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அரசியல் கட்சியினரை சந்தித்து பேச உள்ளார்.
இந்த கூட்டத்தில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சி பங்கேற்கும் என்று கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
இந்த கூட்டத்தில், அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடு மற்றும் பிரச்சாரங்களுக்கு முன்கூட்டியே தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் பேசப்படும் என கூறப்படுகிறது.