பாரம்பரிய மரபுகளுக்கும் எதிராக தி.மு.க அரசின் செயல்பாடு - அண்ணாமலை கண்டிப்பு!
இந்துக்களின் பாரம்பரிய மரபுகளுக்கு எதிராக தி.மு.க அரசின் செயல்பாடு கண்டிக்கத் தக்கது என்று BJP தலைவர் அண்ணாமலை அறிக்கை.
By : Bharathi Latha
தமிழக பக்தர்களின் ஆன்மீக உரிமையில் அரசு தலையிடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் திருச்செந்தூர் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கூறுகிறார். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இது பற்றி கூறுகையில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் நெடுங்காலமாக கந்த சஷ்டி விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா காரணமாக விழாக்கள் நடக்கவில்லை. தற்போது இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 25ஆம் தேதி சூரசம்ஹாரத்துடன் நிறைவு பெறும் விழாவில் பெரும் திரளாக மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள் என நிலையில் பராமரிப்பு பணிகள் காரணம் காட்டி கோவிலுக்குள் பக்தர்கள் தங்க நிர்வாகம் தடை விதித்து உள்ளது. பக்தர்களின் ஆன்மீக உணர்வுகளுக்கும் பாரம்பரிய மரபுகளுக்கும் எதிராக திமுக அரசு தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு உள்நோக்கமாக செயல்பாடு ஆகும்.
பக்தர்கள் தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்ற தமிழக அரசு அனுமதி மறுப்பதும், பக்தர்களின் ஆன்மீக உரிமையில் அரசு தலைவடுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே தமிழக அரசு நடைபெற இருக்கும் கந்த சஷ்டி விழாவில் கோவிலுக்குள் தங்கி இருக்க பக்தர்களின் வேண்டுதலின் நிறைவேற்ற ஆவண செய்ய வேண்டும். பக்தர்களின் பாரம்பரிய உரிமைகளை பறிக்காமல் அவர்களை கோயிலுக்குள் தங்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
Input & Image courtesy: News