சட்டத்துக்கு எதிரான காரியத்தை செய்றீங்க - தமிழக அரசை எச்சரிக்கும் ஆளுநர்
துணைவேந்தர் நியமனம் மசோதா குறித்து விளக்கம் அளிக்குமாறு தலைமை செயலருக்கு தமிழக ஆளுநர் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.
By : Bharathi Latha
தமிழகம் உட்பட 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருந்துவரும் நிலையில், தற்போது மாநில அரசு துணைவேந்தர்கள் நியமனம் செய்யும் வகையில் மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளது. இந்த மசோதா கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு குறிப்பாக மாநில அரசு எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு ஆளுநரிடம் கலந்து ஆலோசிப்பது முக்கியம்.
ஆனால் தமிழக அரசு அதுபற்றி எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தற்போது துணைவேந்தரை நியமிப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்து அவர்களுடைய நியமன பதவிகளை வழங்கி உள்ளது. இந்நிலையில் வேந்தர்களை அரசு நியமிப்பது பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்திற்கு புறம்பானது என்றும் அரசின் தலையீட்டுக்கு வழி வகுக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார் ஆளுநர் அவர்கள்.
தமிழக ஆளுநர் R.N. ரவி அவர்கள் இது குறித்து எழுதிய கடிதத்தில்மேலும் கூறுகையில், "துணைவேந்தர்கள் மாநிலஅரசே நியமிப்பது சட்டத்திற்கு எதிரானது. அத்தகைய வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுமதிக்கப்பட்டது. அவற்றை முறையாக செய்யவேண்டும் என்றும். இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறும் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக" அவர் தன்னுடைய செய்திக்குறிப்பில் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: Polimer