3 இடங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி! ஏன்?
உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் மூன்று இடங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி.
By : Bharathi Latha
உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் மூன்று இடங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்து இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் அக்டோபர் இரண்டாம் தேதி நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி தமிழக போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ததால் ஏற்பட்ட சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்து இருந்தார்கள்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நவம்பர் 6ஆம் தேதி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட வழக்கை தள்ளி வைத்தார். மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி அது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் 24 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுக்கப்பட்டுள்ளது. 23 இடங்களில் உள் அரங்குகளில் கூட்டம் நடத்தலாம். கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று இடங்களில் மட்டும் தான் அணிவகுப்பு ஊர்வலம் அல்லது உள் அரங்கில் கூட்டம் நடத்திக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் தரப்பில் ஆஜரான வக்கீல் இது பற்றி வாதாடுகையில், தமிழ்நாடு அனுமதி பூங்காவாக திகழும் பொழுது ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு மட்டும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை அரசு காரணம் காட்டி விடுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி 500 இடங்களில் அனுமதி வழங்கிய பொழுது, ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு மற்றும் மூன்று இடங்களில் அனுமதி அளிப்பது என்பது ஏற்க முடியாது. உளவுத்துறை அறிக்கையை காரணம் காட்டி அரசு தப்பிக்க நினைக்கிறது. எனவே 50 இடங்களில் அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் அல்லது கோட் அவமதிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் பாதுகாப்பு கருதி தான் தற்பொழுது மூன்று இடங்களில் மட்டும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக அரசு தரப்பு வக்கீல் வாதாடி இருக்கிறார் மேலும் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
Input & Image courtesy: News