Kathir News
Begin typing your search above and press return to search.

குறும்படத்தை பார்க்க ₹ 5.5 கோடி மாணவர்களிடம் வசூலா? பள்ளிக் கல்வித்துறைக்கு ஆசிரியர் கோரிக்கை!

வசூல் ஆகாத குறும்படத்தை பள்ளிகளில் மாணவர்கள் பார்க்க 5.5 கோடி வசூலிக்க வேண்டிய இருப்பதாக ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

குறும்படத்தை பார்க்க ₹ 5.5 கோடி மாணவர்களிடம் வசூலா? பள்ளிக் கல்வித்துறைக்கு ஆசிரியர் கோரிக்கை!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  26 Nov 2022 4:44 AM GMT

மதுரையில் பெயர் தெரியாத குறும்படத்தை பள்ளிகளில் திரையிட மாணவர்களிடம் தலா பத்து ரூபாய் வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது. இதற்கு ஆசிரியர் சங்கம் சார்பில் கடும் எதிர்ப்பை கூறியிருக்கிறார்கள். மதுரையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் "குழந்தைகளின் ஓட்டப்பந்தய வீராங்கனை" என்ற குறும்படத்தை நவம்பர் முதல் மார்ச் வரை திரையிடவும், இதற்காக மாணவர்களிடம் தலா பத்து ரூபாய் கட்டணம் வசூலிக்கவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தவிடப்பட்டுள்ளது.


மேலும் இது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், குறும்படத்தை திரையிட அனுமதி பெற்றவர்கள் புரொஜெக்டருடன் பள்ளிக்கு வருவார்கள். அனைத்து மாணவர்களையும் ஒரே இடத்தில் அமர வைப்பது ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இதற்கு ஆசிரியர் சங்கம் சார்பில் கருத்து கூறுகையில், படத்தின் பெயரை இதுவரை கேள்வி படாதது போல் இருக்கிறது. இங்கு அமைந்துள்ள அரசு பள்ளிகளில் சுமார் 1.60 லட்சம், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1.40 லட்சம், மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ் சி பள்ளிகள் கலா 2.40 லட்சம் என 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.


அவர்களிடம் தலா பத்து ரூபாய், சுமார் 5.30 கோடி வசூல் செய்ய வேண்டி இருக்கிறது. எனவே பெயர் தெரியாத இந்த படத்திற்கு ஏன் இவ்வளவு தொகை வசூல் செய்ய வேண்டும்? மின்னணு வருகை பதிவு, ஆன்லைன் வகுப்புகள் என தொழில்நுட்பத்தை புகுத்தும் கல்வித்துறை ஏன் இதில் மட்டும் ப்ரொஜெக்டர் மூலம் படத்தை வெளியிட வேண்டும். பென் டிரைவ் அல்லது ஈமெயிலுக்கு அனுப்பி வைத்தால், பள்ளி நிர்வாகமே இலவசமாக மாணவர்களுக்கு அதை வெளியிட முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த ஒரு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்ற ஆசிரியர் சங்கம் வேண்டுகோளை விடுத்து இருக்கிறார்கள்.

Input & Image courtesy: Dinamalar News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News