Kathir News
Begin typing your search above and press return to search.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மற்றொரு உயிரிழப்பு: என்ஜினியர் மாணவரின் விபரீத முடிவு!

ஆன்லைன் விளையாட்டு பணத்தை இழந்த காரணத்தினால் என்ஜினியர் மாணவரின் தற்கொலை முடிவு.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மற்றொரு உயிரிழப்பு: என்ஜினியர் மாணவரின் விபரீத முடிவு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  8 Oct 2022 5:26 AM GMT

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ரயில் நிலையம் அருகே நாளங்காடிக்கு பின்பகுதியில் வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் நேற்று காலை திருச்சி ரயில்வே போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அங்கு கிடந்த வாலிபரின் தலை மற்றும் ஒரு கல் துண்டாக துண்டிக்கப்பட்டும், உடல் தனியாகவும் கடந்ததது. இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கோணத்தில் விசாரணை நடத்தினார்கள்.


இறந்து கடந்த வாலிபர் மணப்பாறையை அடுத்த அருகே உள்ள மலையாண்டி பட்டியைச் சேர்ந்த ரவிக்குமாரின் மகன் சந்தோஷ் என்பவர் தெரியவந்தது. இவர் மணப்பாறை அருகே உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் ஒன்று இறுதி ஆண்டு படித்து வந்தார். மேலும் இவர் கடந்த ஆறு மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்து உள்ளார். ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்த நகைகளை எடுத்து சென்று அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டும், ஆன்லைன் ரம்மி விளையாடுகின்றார். இதில் அந்த பணத்தையும் அவர் இழந்ததால் மிகுந்த மன அழுத்ததிற்கு ஆளாகினார். பின்னர் ரயில் நிலையம் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது போலீசார் சாரணையில் தெரியவந்துள்ளது.


ஆன்லைன் விளையாட்டினால் பணத்தை இழந்த என்ஜினியர் மாணவரின் உயிரிழப்பு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பை ஏற்படப் உள்ளது. தமிழக அரசு உடனடியாக ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும். ஆன்லைன் விளையாட்டு ஊக்குவிக்கும் பிரபலங்கள் விளம்பரத்திற்கும் அரசு தடைப்பிடிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் மணப்பாறை பகுதியில் சேர்ந்த கந்தர்வகோட்டை தொகுதி எம்.எல்.ஏ சின்னத்துரை அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. Input & Image courtesy: Thanthi News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News