இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.34 ஆயிரத்திற்கும் கீழ் இறங்கியுள்ளது. கடந்த ஒரு சில வாரங்களாக ஆபரணத்தங்கத்தின் விலை குறைந்த நிலையில் காணப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் தங்கத்தின் மீதான முதலீடுகளை தொழிலதிபர்கள் நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
By : Thangavelu

இதே போன்று தொடர்ந்து நீடித்து வந்தால் தங்கத்தின் விலை 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைய வாய்ப்புள்ளது. கொரோனா பரவல் பல நாடுகளில் குறைந்து கொண்டு வருகிறது. இதனால் தொழில் நிறுவனங்கள் பழைய மாதிரி மீண்டும் தலை தூக்கியுள்ளது.
இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.4,216க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.265 உயர்ந்து ரூ.33,728க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.70.10க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.70,100க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில நாட்களில் மேலும் தங்கத்தின் விலை குறையவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.