Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை நகரை குளிர்வித்த மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி.!

சென்னை, காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

சென்னை நகரை குளிர்வித்த மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி.!
X

ThangaveluBy : Thangavelu

  |  8 Jun 2021 7:53 AM IST

சென்னை, காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

கடந்த மாதம் முதல் கத்திரி வெயில் சென்னை நகரை வாட்டி வதைத்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கியிருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கத்திரி முடிந்த நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெப்பம் சுட்டெரித்து வந்தது.




இந்நிலையில், மாலையில் இருந்து பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்த நிலையில், இரவு நேரங்களிலும் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேல் கனமழை பெய்தது.

கே.கே.நகர், வடபழனி, வண்ணாரப்பேட்டை, கோடம்பாக்கம், மற்றும் புறநகர் பகுதிகளான குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இந்த மழை சென்னை நகரத்தை குளிர்வித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News