Kathir News
Begin typing your search above and press return to search.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன.!

விரைவில் பெட்ரோல், டீசல் விலை நூறு ரூபாயை தொட்டுவிடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன.!
X

ThangaveluBy : Thangavelu

  |  18 Jun 2021 7:30 AM IST

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை இந்தியாவில் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணம் செய்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மே மாதம் இறுதி வரை பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றம் இன்றி இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது விலையை உயர்த்தி வருகிறது.




இதனிடையே சென்னையில் நேற்று (ஜூன் 17) பெட்ரோல் லிட்டர் 97.91 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 92.04 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.




இந்நிலையில், இன்று (ஜூன் 18) பெட்ரோல் லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்து லிட்டர் 98.14 ரூபாய் ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 27 காசுகள் உயர்ந்து 92.31 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் பெட்ரோல், டீசல் விலை நூறு ரூபாயை தொட்டுவிடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News