தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!
தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!
By : Kathir Webdesk
தமிழர்களின் பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நேரத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,26,261 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களுமே கொரோனா தொற்றால் முன்பு பாதித்தது போன்று தற்போது பாதிப்பு ஏதுமில்லை. தற்போது வரை 8,380 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகின்றனர். இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் 208 பேர், கோவை 76, செங்கல்பட்டு 40, திருவள்ளூர் 36, திருப்பூர் 27, ஈரோடு 27, காஞ்சிபுரம் 32, சேலம் 48 பேர், திருச்சி 20, மதுரை 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில்இருந்த 20 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர்.