இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்.!
இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்.!
By : Kathir Webdesk
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.48 குறைந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு சில மாதங்களாவே தங்கம் விலை அதிகரித்து காணப்பட்டது. தொழில் அதிபர்கள் பலர் தங்கத்தின் மீது முதலீடு செய்தனர். இதனால் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே காணப்பட்டு வந்தது.
தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் காரணத்தினால் பல தொழிலதிபர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை நிறுத்தியுள்ளனர். இதன் காரணமாகவே தங்கத்தின் மீதான விலை குறைந்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.48 குறைந்து ரூ.4,416க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.35,328க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.74.10க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.74,100க்கும் விற்பனை செய்யப்படுகிறது.