சர்வதேச சுற்றுலா மையத்திற்கு சுற்றுலா பயணிகள் வரத்தடை - ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
சர்வதேச சுற்றுலா மையத்திற்கு சுற்றுலா பயணிகள் வரத்தடை - ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
By : Bharathi Latha
பொங்கல் பண்டிகை என்றாலே சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரி களை கட்டும். பொங்கல் அன்று முதல் காணும் பொங்கல் வரை தொடர்ந்து மூன்று நாட்களும் குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வருகை தருவது வழக்கம். அதே போல காணும் பொங்கல் அன்று பீச், திருவேணி சங்கமம் என்ற முக்கடல் சங்கமம் கடற்கரைகளில் அமர்ந்து இருந்து தாங்கள் கொண்டு வந்த உணவு பதார்த்தங்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாறி பொங்கல் பண்டிகையை கோலாகமாக கொண்டாவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், கொரோனா தொற்று தடுப்பு பணிகளை தீவீர படுத்தும் வகையில் புத்தாண்டிற்கு சுற்றுலா மையங்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்க தடை விதித்தது போல பொங்கல் பண்டிகைக்கும் சுற்றுலா மையங்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்க தடை விதிக்கபட்டு உள்ளது.
அந்தவகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதிவரை சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் அறிவித்து உள்ளார்.