கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்.!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தற்போது கொடைக்கானலுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

By : Thangavelu
கொரோனா பரவல் எதிரொலியாக கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் இபாஸ் பெற்றவர்கள் மட்டும் கொடைக்கானல் செல்லலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனிடையே தொற்று குறைந்து வரும் நிலையில், இபாஸ் முறை ரத்து செய்யப்பட்டு நேற்று முதல் சுற்றுலா பயணிகள் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனிடையே கொடைக்கானலுக்கு எப்போது அனுமதி கிடைக்கும் என சுற்றுலா பயணிகள் ஏங்கி இருந்த நிலையில் தற்போது அனுமதி கிடைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தற்போது கொடைக்கானலுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் கொடைக்கானல் மலையை ரசித்து வருகின்றனர். இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றுள்ளது.
மேலும், தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான பிரையண்ட் பூங்கா, ரோஜாபூங்கா உள்ளிட்டவை 9 மணிக்கு திறக்கப்பட்டது.
