ராமநாதபுரத்தில் மணல் அள்ளி சென்ற டிராக்டரை விரட்டிப்பிடித்த டி.எஸ்.பி.!
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் ஆற்றுப்படுகையில் மணல் அள்ளிக் கொண்டு தப்ப முயன்ற டிராக்டரை டி.எஸ்.பி. விரட்டிப்பிடித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
By : Thangavelu
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் ஆற்றுப்படுகையில் மணல் அள்ளிக் கொண்டு தப்ப முயன்ற டிராக்டரை டி.எஸ்.பி. விரட்டிப்பிடித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஆற்றுப்படுகையில், மணல் திருடப்படுவதாக கமுதி டி.எஸ்.பி., பிரசன்னாவிற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கோவிலாங்குளம் அருகே காணிக்கூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரை கண்டதும், டிராக்டரை வேகமாக ஓட்டிச்சென்றார் டிரைவர்.
இதனை தொடர்ந்து டிராக்டரை டி.எஸ்.பி., பிரசன்னா விரட்டிச் சென்றார். அப்போது வறண்டு கிடந்த வயலில் இறக்கி தப்பிச்செல்ல முயன்றார் டிரைவர். ஆனாலும் விடாமல் விரட்டிச்சென்று டிராக்டரை மடக்கி பிடித்து டிரைவரை கைது செய்தார்.
டி.எஸ்.பி. நடத்திய விசாரணையில் தனக்கு மணல் அள்ளிச்செல்வது மட்டும்தான் தெரியும் என்றும், எங்கு விற்பனை செய்வது என்பது உரிமையாளருக்குத்தான் தெரியும் என டிரைவர் கூறியுள்ளார்.