ஓசூர் வனப்பகுதியில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து.. 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே மரணம்.!
ஓசூர் வனப்பகுதியில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து.. 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே மரணம்.!
By : Kathir Webdesk
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், மஞ்சுகொண்டப்பள்ளி அருகே, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பலர் டிராக்டர் மூலம் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலம் கனகபுரம் பகுதியில் இருந்து தப்பகுலி பகுதியில் இருக்கும் கோயிலுக்கு அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஓசூரில் இருந்து 80 கி.மீ தொலைவில் இருக்கும் வனப்பகுதியில் டிராக்டர் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் டிராக்டருக்கு அடியில் சிக்கிய 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களுடன் பயணித்த மற்றவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.
தகவல் அறிந்து சென்ற போலீசார், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததாகவும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் மீட்புப் பணியில் சிக்கல் நீடிப்பதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.