Kathir News
Begin typing your search above and press return to search.

கோடம்பாக்கத்தில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம் ! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள் !

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டப்பணி கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பவர்ஹவுஸ் முதல் ஆற்காடு சாலை 80 அடி சாலை சந்திப்பு வரை நடைபெறுகின்ற நிலையில், கீழ்கண்ட இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இந்த போக்குவரத்து மாற்றம் ஆனது நாளை (14ம் தேதி) முதல் ஒரு வருடத்திற்கு அமல்படுத்தப்பட உள்ளது.

கோடம்பாக்கத்தில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம் !  அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள் !
X

ThangaveluBy : Thangavelu

  |  13 Sep 2021 4:13 AM GMT

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டப்பணி கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பவர்ஹவுஸ் முதல் ஆற்காடு சாலை 80 அடி சாலை சந்திப்பு வரை நடைபெறுகின்ற நிலையில், கீழ்கண்ட இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இந்த போக்குவரத்து மாற்றம் ஆனது நாளை (14ம் தேதி) முதல் ஒரு வருடத்திற்கு அமல்படுத்தப்பட உள்ளது.

இது பற்றி போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அதன்படி, போரூர் மார்க்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கமாக செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யவில்லை.

கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கத்திலிருந்து போரூர் சாலிகிராமம் நோக்கி ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், பவர்ஹவுஸ் சந்திப்பு வரை சென்று இடதுபுறம் திரும்பி, அம்பேத்கர் சாலையில், அசோக் நகர் போலீஸ் நிலையம் வரை சென்று வலது புறம் திரும்பி, 2வது அவென்யூ சாலை வழியாக 100 அடி சாலை சந்திப்பு வரை சென்று, நேராகவும், ராஜன் சாலை, ராஜ மன்னார் சாலை, 80 அடிசாலை வன்னியர் சாலை வழியாக போரூர்-சாலிகிராமம் செல்லலாம்.

கோடம்பாக்கம் மேம்பாலத்திலிருந்து வடபழனி சந்திப்பு நோக்கி, ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், பவர்ஹவுஸ் சந்திப்பு வரை சென்று, இடது புறம் திரும்பி அம்பேத்கர் சாலையில் அசோக் நகர் போலீஸ் நிலையம் வரை சென்று, வலதுபுறம் திரும்பி 2-வது அவென்யூ சாலை, 100 அடி சாலை வழியாக சென்று வடபழனி சந்திப்பு செல்லலாம்.

வடபழனி சந்திப்பிலிருந்து ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், துரைசாமி சாலைக்கு வலதுபுறமாக திரும்பக்கூடாது. மாறாக பவர்ஹவுஸ் சந்திப்பு, அம்பேத்கர் சாலை, அசோக் நகர் போலீஸ் நிலையம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பிச்செல்லலாம்.

அசோக் பில்லரிலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் நோக்கிச்செல்லும் வாகனங்கள் அம்பேத்கர் சாலையில், அசோக் நகர் போலீஸ் நிலையம் சந்திப்புவரை சென்று, இடதுபுறம் திரும்பி, 2வது அவென்யூ சாலை, துரைசாமி சாலை, ஆற்காடு சாலை வழியாக செல்லலாம்.

ஆற்காடு சாலை துரைசாமி சாலை சந்திப்பிலிருந்து பவர்ஹவுஸ் சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள், வழக்கம்போல் அனுமதிக்கப்படும். ஆனால், பவர்ஹவுஸ் சந்திப்பிலிருந்து ஆற்காடு சாலை துரைசாமி சாலை சந்திப்பிற்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை (ஒரு வழி பாதை).

வாகனங்கள், அம்பேத்கர் சாலை 2-வது அவென்யூ சாலை சந்திப்பிலிருந்து 2-வது அவென்யூ சாலை 100 அடிசாலை சந்திப்பிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், 2வது அவென்யூ சாலை 100 அடிசாலை சந்திப்பிலிருந்து அம்பேத்கர் சாலை 2-வது அவென்யூ சாலை சந்திப்பிற்கு செல்ல அனுமதியில்லை (ஒருவழிபாதை).

வாகனங்கள் அம்பேத்கர் சாலையில், பவர்ஹவுஸ் சந்திப்பிலிருந்து அசோக் நகர் போலீஸ் நிலைய சந்திப்பு நோக்கி அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அசோக் நகர் போலீஸ் நிலையம் சந்திப்பிலிருந்து, பவர் ஹவுஸ் சந்திப்பிற்கு செல்ல அனுமதியில்லை. (ஒருவழிப் பாதை) ஆகும்.

Source: Maalaimalar

Image Courtesy: Toptamilnews


Next Story
கதிர் தொகுப்பு
Trending News