மாற்று அறுவை சிகிச்சை.. தொடர்ந்து 6-வது முறையாக தமிழகம் முதலிடம்.. விருது வழங்கும் மத்திய அரசு.!
மாற்று அறுவை சிகிச்சை.. தொடர்ந்து 6-வது முறையாக தமிழகம் முதலிடம்.. விருது வழங்கும் மத்திய அரசு.!
By : Kathir Webdesk
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 6 ஆவது முறையாக முதலிடம் பிடித்து தமிழகம் சாதனை படைத்துள்ளது. பொதுவாக மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பது வழக்கம். ஆனால் கடந்த சில வருடங்களாக மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக மூளை சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்வதின் மூலமாக 8 பேருக்கு மீண்டும் வாழ்வளிக்க உதவுகிறது.
தமிழகத்தில் இதுவரை சுமார், 1382 கொடையாளர்களிடமிருந்து 8,163 உறுப்புகள் பெறப்பட்டுள்ளது. இந்த உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் தமிழக அரசு கடந்த 5 முறை மத்திய அரசிடமிருந்து விருதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தற்போதும் தமிழகம் தொடர்ந்து 6- வது முறையாக முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
இதற்கான விருதை தமிழக சுகாதாரத்துறைக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று வழங்குகிறார்.
புதுக்கோட்டையில் இருந்தவாரே காணொலி வாயிலாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விருதை பெறுகிறார். இந்த விருதால் தமிழகத்தில் இன்னும் விழிப்புணர்வு அதிகரிக்கும். இதன் மூலமாக உடல் உறுப்பு தானம் செய்பவர்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.