Kathir News
Begin typing your search above and press return to search.

திருச்சி: சோழர் காலத்து நாணயங்கள் மணச்சநல்லூரில் கண்டெடுப்பு !

சங்கு வளையல்கள் மற்றும் சுழல் துண்டுகள் உள்ளிட்ட பழங்கால பொருட்களும் அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டன.

திருச்சி: சோழர் காலத்து நாணயங்கள் மணச்சநல்லூரில் கண்டெடுப்பு !
X

Representational Image

Saffron MomBy : Saffron Mom

  |  8 Aug 2021 2:36 AM GMT

குறைந்தது 1,000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் சோழர் காலத்தை சேர்ந்த செப்பு நாணயங்கள் திருச்சி மாவட்டத்தில் மணச்சநல்லூர் நகருக்கு அருகில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சங்கு வளையல்கள் மற்றும் சுழல் துண்டுகள் உள்ளிட்ட பழங்கால பொருட்களும் அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டன. தொல்பொருட்கள் நிலத்திற்கு மேற்பரப்பிற்கு அருகே மீட்கப்பட்டதால், தொல்லியல் ஆர்வலர்கள் மாநில அரசு மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI) இந்த இடத்தை ஆராயும்படி வலியுறுத்தியுள்ளனர்.

மணச்சநல்லூரிலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ள சோலகநல்லூர் கிராமத்தில் வயல்களை உழும் விவசாயிகள் தங்கள் வயலில் செப்பு நாணயங்களைக் கண்டனர். சமீபத்திய ஆண்டுகளில், சோழர் காலத்தின் பழங்கால எச்சங்களை ஏற்கனவே இந்த கிராமத்தில் கண்டறிய முயன்ற தனியார் கல்லூரி பேராசிரியர் பாபுவுக்கு உள்ளூர்வாசிகள் தகவல் தெரிவித்தனர்.


இதுகுறித்து பாபு கூறுகையில், "நிலத்தின் மேற்பரப்பில் கண்டறியப்பட்ட இரண்டு நாணயங்கள் செம்பால் ஆனது. நாணயத்தின் ஒரு பக்கத்தில் ஒரு விளக்கும், ராஜராஜசோழன் நின்று கொண்டு இருக்கும்படியான உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பக்கத்தில் அவரே உட்கார்ந்து இருக்கும் வகையில் (அரசமர்வு) உருவம் பொறிக்கப்பட்டுள்ளது" என்று கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நாணயங்கள் 2.5 சென்டிமீட்டர் விட்டமும் ஐந்து கிராமிற்கும் குறைவான எடையும் கொண்டவை.

பாபு, இத்தகைய நாணயங்களை தஞ்சாவூர் மற்றும் திருச்சி அருங்காட்சியகங்களில் இருக்கும் செம்பு நாணயங்களோடு ஒப்பிட்டு இவற்றின் வயதை கணக்கிட முயன்றார். இந்த நாணயங்கள் தன்னுடைய தந்தையை கவுரவிக்க ராஜேந்திர சோழனால் வெளியிடப்பட்டிருக்கலாம் என்றும் கூறுகிறார்.

மேலும் சங்கு வளையல்கள் மற்றும் மாணிக்க கற்கள் ஆகியவையும் கண்டறியப்பட்டுள்ளன. சோழங்கநல்லூர் சோழர்களின் வர்த்தக தளமாக இருந்திருக்கலாம். இந்த பிராந்தியத்தை நூற்றாண்டுகளாக சோழர்கள் ஆண்டு வந்தனர். திருச்சியின் உறையூர் சோழர்களின் தலைநகரமாக இருந்ததால் மணச்சநல்லூர் அருகில் இன்னும் பல பழங்கால பொருட்கள் கண்டறியப்படலாம் என்றும் இதேபோல் கடந்த காலத்திலும் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவிக்கிறது.

மேலும் பாபு கூறுகையில், இந்த நாணயங்கள் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் பிரிவு துறையிடம் மேலும் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்கிறார்.


With Inputs From: TOI

Cover Image Courtesy (Representational Image) : Amazon

Next Story
கதிர் தொகுப்பு
Trending News