மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் சஸ்பெண்ட்.!
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன் பிணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

By : Thangavelu
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன் பிணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி புத்தூரில் அமைந்துள்ள பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழ்த்துறையில் பட்டமேற்படிப்பு படித்து வந்த மாணவிகள், 5 பக்க அளவிலான புகார் மனுவை கல்லூரி முதல்வருக்கு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில், தமிழ்த்துறை தலைவரான பேராசிரியர் பால் சந்திமோகன் வகுப்பறையில் தங்களுடன் மிகவும் நெருக்கமாக அமர்ந்து கொண்டு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், இரட்டை அர்த்தத்தில் பேசி வருவதாகவும் கூறியுள்ளனர்.
அது மட்டுமின்றி ஆடையை தளர்த்திக்கொண்டு பல்வேறு முறையில் பாலியல் தொல்லை அளிப்பதாகவும், அதற்கு உடந்தையாக பெண் ஒருவராகவும் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில், பாலியல் புகாரில் தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகனை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
