டீசல் விலை உயர்வு எதிரொலி: இன்று முதல் லாரி வாடகைக் கட்டணம் உயர்வு.!
நாடு முழுவதும் எண்ணெய் நிறுவனங்கள் டீசல், மற்றும் பெட்ரோல் விலையை தினமும் நிர்ணயம் செய்து வருகிறது. இதனால் தினமும் 1 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை உயர்வதால் லாரி உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
By : Thangavelu
நாடு முழுவதும் எண்ணெய் நிறுவனங்கள் டீசல், மற்றும் பெட்ரோல் விலையை தினமும் நிர்ணயம் செய்து வருகிறது. இதனால் தினமும் 1 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை உயர்வதால் லாரி உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதனால் வழக்கமாக வாங்கும் வாடகை டீசலுக்கே சென்று விடுவதால் லாரி பராமரிப்பு மற்றும் டிரைவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.
இதனிடையே சென்னை மாதவரத்தில் நேற்று நடந்த தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு நடைபெற்றது. இதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய, மாநில அரசுகள் டீசல் விலையை குறைத்து, டீசல் விற்பனையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், 15 ஆண்டுகள் பழைய வாகனங்களை அழிக்கும் நடவடிக்கையை 20 ஆண்டுகளாக நீட்டித்து மாற்றம் செய்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனால் சாமானிய மக்கள் பயன்படுத்துகின்ற காய்கறி மற்றும் பால் விலை உயர வாய்ப்புள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் விரைந்து இதற்கு ஒரு தீர்வு காண்பது அனைத்து மக்களின் கோரிக்கையும் ஆகும்.