Kathir News
Begin typing your search above and press return to search.

பிச்சாவரம் கடலில் 672 கடல் ஆமை குஞ்சுகளை விட்ட வனத்துறை.!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ளது பிச்சாவரம் வனப்பகுதி. இந்த வனப்பகுதியை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் வனத்துறை மூலம் செயற்கை ஆமை முட்டை பொறிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.

பிச்சாவரம் கடலில் 672 கடல் ஆமை குஞ்சுகளை விட்ட வனத்துறை.!
X

ThangaveluBy : Thangavelu

  |  16 March 2021 1:13 PM GMT

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ளது பிச்சாவரம் வனப்பகுதி. இந்த வனப்பகுதியை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் வனத்துறை மூலம் செயற்கை ஆமை முட்டை பொறிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. கடலாமை முட்டைகள் சேகரித்து அதனை பாதுகாப்பாக பொறிப்பகத்தில் வைத்து முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளி வந்தவுடன் கடலில் விடப்படும்.

அதே போன்று இந்த ஆண்டு பிச்சாவரம் வனச்சரகம் மூலம் 1,300க்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் சேகரித்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 672 ஆமை குஞ்சுகள் பொறிக்கப்பட்டது. இதனை கடலூர் மாவட்ட வனச்சரக அலுவலர் செல்வம், அதனைக் கடலில் விட உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பிச்சாவரம் வனச்சரக அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில் வனக்காப்பாளர்கள் ராஜேஷ்குமார், சரண்யா, அபிராமி, அலமேலு வனக்காவலர்கள் ஆமைகுஞ்சுகளை கடலில் பாதுகாப்பாக விட்டனர்.

இந்த ஆமைக்குஞ்சுகள் ஒவ்வொன்றாக கடலில் ஊர்ந்து சென்றது பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கப்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News