தூத்துக்குடியில் ஊரடங்கை மீறிய வாகனங்கள் பறிமுதல்.!
தூத்துக்குடியில் ஊரடங்கின்போது தேவையின்றி வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக, மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் கூறியிருந்தார்.

By : Thangavelu
தமிழகம் முழுவதும் இன்று முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் தேவையின்றி வெளியில் வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதே போன்று தூத்துக்குடியில் ஊரடங்கின்போது தேவையின்றி வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக, மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் கூறியிருந்தார்.
இதனிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளிடம் கொரோனா தொற்று பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அத்துமீறிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.
