சொந்த ஊரான திருக்குவளையில் கைதாகி அசிங்கப்பட்ட உதயநிதி.!
சொந்த ஊரான திருக்குவளையில் கைதாகி அசிங்கப்பட்ட உதயநிதி.!
By : Mohan Raj
தடையை மீறி திருக்குவளையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்டாலினால் இனி தி.மு.க'விற்கு பெரிதாக ஓட்டுக்களை சேகரிக்க முடியாது என உணர்ந்து கொண்ட தி.மு.க இனி ஸ்டாலினை தி.மு.க'வின் முகமாக மக்கள் மத்தியில் நிறுத்தினால் தி.மு.க'வினரே ஓட்டு போடமாட்டார்கள் என உணர்ந்து தற்பொழுது உதயநிதியை களத்தில் முன்னிருத்த திட்டங்களை வகுத்து பணிகளை துவங்கிது.
இதன் தொடர்ச்சியாக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் 100 நாள் பிரச்சார பயணத்தை மறைந்த முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளையில் இருந்து துவங்கினார்.
ஆனால் உதயநிதி அனுமதி ஏதும் முறையாக வாங்காமல் பிரச்சாரம் செய்ததாக தெரிகிறது. இதனால் அனுமதியின்றி பிரச்சாரம் செய்ததாக உதயநிதி மற்றும் அவருடன் பங்கேற்ற தி.மு.க கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் மதிவாணன், நாகை தி.மு.க தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கௌதமன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.
ஊரெல்லாம் மத்திய, மாநில அரசுகளை குறை கூறி அரசியல் செய்யும் கட்சிக்கு முறையாக அனுமதி வாங்கி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற அடிப்படை ஞானம் இல்லாதது ஆச்சர்யமே! மேலும் ஸ்டாலினை போலவே உதயநிதியும் இப்படி அடிப்படை ஞானம் இல்லாமல் தி.மு.க'வை நிற்கதியில் நிற்க வைத்து விடுவாரோ என்ற பயம் உடன்பிறப்புகள் மத்தியில் எழுந்துள்ளது.