"பணம் கொடுத்தால் உயிரை காப்பாற்றுவேன் " உடுமலையில் அரசு பெண் மருத்துவரின் அராஜகம் !
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர் ஒருவர் கர்ப்பிணியின் வயிற்றுக்குள்ளாகவே உயிரிழந்த சிசுவை உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அகற்றாமல் வலியோடு துடிக்க வைத்து, பின்னர் தான் பணிபுரியும் தனியார் மருத்துவமனைக்கு வரவழைத்து அறுவை சிகிச்சை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By : Thangavelu
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர் ஒருவர் கர்ப்பிணியின் வயிற்றுக்குள்ளாகவே உயிரிழந்த சிசுவை உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அகற்றாமல் வலியோடு துடிக்க வைத்து, பின்னர் தான் பணிபுரியும் தனியார் மருத்துவமனைக்கு வரவழைத்து அறுவை சிகிச்சை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா காரத்தொழுவை சேர்ந்தவர் ராஜராஜேஸ்வரி. இவர் கடந்த மாதம் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது ராஜ ராஜேஸ்வரியை கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லல்பட்டுள்ளார். அப்போது அவருக்கு வலி அதிகமாக ஏற்பட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து உடுமலை அரசு மருத்துவமனையில் பரிசோதித்த ராஜராஜேஸ்வரியை பரிசோதனை செய்த மருத்துவர் ஜோதிமணி, சிசு வயிற்றிலேயே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார். உடனடியாக அகற்ற வேண்டும் என்றால் அருகாமையில் உள்ள ஸ்ரீவிநாயக் மெடிக்கல் சென்டர் என்ற தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
அங்கே ராஜராஜேஸ்வரியை அழைத்து சென்றபோது அங்கு ஜோதிமணி இருந்துள்ளார். உடனடியாக ராஜராஜேஸ்வரியின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்றால் 35 ஆயிரம் பணத்தை கட்டவேண்டும் அப்போதுதான் அறுவை சிகிச்சை செய்வேன் என்று ஜோதிமணி கூறியுள்ளார். இதனால் பயந்துபோன ராஜராஜேஸ்வரியின் குடும்பத்தினர் பணத்தை கட்டி அறுவை சிகிச்சை செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் இந்த அறுவை சிகிச்சையை அரசு மருத்துவமனையிலேயே செய்திருக்கலாமே என்று ராஜராஜேஸ்வரியின் உறவினர்கள் மருத்துவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இது பற்றி முகநூல் பக்கத்தில் கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் படத்துடன் வெளியிட்டுள்ளனர். இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு சென்ற பின்னர் ஜோதிமணியை தாராபுரம் மருத்துவமனைக்கு பணிமாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் கர்ப்பிணிக்கு நடந்த சம்பவம் பற்றி விசாரிக்க ஆர்டிஓ தலைமையில் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.
Source: Polimer