58 மணி நேரத்தில் 46 வகை உணவுகளை சமைத்து அசத்திய தமிழக சிறுமி.!
58 மணி நேரத்தில் 46 வகை உணவுகளை சமைத்து அசத்திய தமிழக சிறுமி.!

ஒரு மணி நேரத்தில் 46 வகை உணவுகளை சமைத்து தமிழகத்தைச் சேர்ந்த சிறுமி சாதனை படைத்துள்ளார்.
தற்போதைய கால கட்டத்தில் மக்கள் அனைவரும் ஹோட்டலில் சென்று சாப்பிடுவது அதிகரித்து வருகிறது. அதை மாற்றும் விதமாகவும், அனைவரும் வீட்டில் சமைத்து சத்தான உணவை சாப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமி சாய் ஸ்ரீ என்ற சிறுமி, ஒரு மணி நேரத்தில் 46 வகையான பாரம்பரிய உணவுகளை சமைக்கும் சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
அதன்படி, வெறும் 58 நிமிடங்களில் 46 வகையான உணவுகளை சமைத்து அசத்தினார். இதன்மூலம், உலக சாதனை யூனிகோ தலைமை நீதிபதி R.சிவராமன் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டதுடன், ஒரு மணிநேரத்தில் 33 வகை உணவுகளை தயாரித்த கேரளாவை சேர்ந்த 10 வயது சிறுமியின் சாதனையையும் அவர் முறியடித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாதனைச் சிறுமி, தனக்கு சமையல் கலையில் அதிக அளவு ஆர்வம் இருந்ததாகவும், தனது அம்மா தகுந்த பயிற்சி வழங்கி தனது இந்த சாதனைக்கு வழிகாட்டியாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, சிறுமியின் தாயார் பேசுகையில், "எனது மகள் எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஒரு முறை சொல்லும்போது, அதை எளிதில் உள்வாங்கிக் கொள்ளும் திறமை கொண்டவர். அவளுக்கு சமையல் செய்வதில் அதிக ஆர்வம் இருந்தது. இந்த கால கட்டத்தில் தனது மகளுக்கு பயிற்சி அளித்தேன். அதை எனது மகள் விரைவாக உள்வாங்கி கொண்டார். எனது மகள் இந்த சாதனை படைத்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.