நீலகிரி: 100 சதவீத தடுப்பூசி செலுத்திக்கொண்ட பழங்குடியின மக்கள்.!
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், நோய் தொற்றை தடுப்பதற்காக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் அதிகளான பழங்குடியின மக்கள் வசிக்கின்ற மாவட்டமாக நீலகிரி உள்ளது. அங்கு தடுப்பூசி செலுத்து பணிகளை மாவட்ட நிர்வாகம் வேகப்படுத்தியுள்ளது.

By : Thangavelu
இந்தியாவிலேயே பழங்குடியினருக்கு 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தி நீலகிரி மாவட்டம் சாதனை படைத்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், நோய் தொற்றை தடுப்பதற்காக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் அதிகளான பழங்குடியின மக்கள் வசிக்கின்ற மாவட்டமாக நீலகிரி உள்ளது. அங்கு தடுப்பூசி செலுத்து பணிகளை மாவட்ட நிர்வாகம் வேகப்படுத்தியுள்ளது.
அங்கு படுகர், தோடர், குரும்பர் உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின சமூக மக்கள் வசித்து வரும் நிலையில், சுகாதாரத்துறையினர் குடியிருப்பு பகுதிகளுக்கே நேரடியாக சென்று தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், 21 ஆயிரத்து 800 பழங்குடியினருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே பழங்குடியின மக்களுக்கு அதிகமான தடுப்பூசியை செலுத்தி மாவட்டமாக நீலகிரி சாதனை புரிந்துள்ளது.