Kathir News
Begin typing your search above and press return to search.

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது ? தமிழக அரசு தகவல் !

கொரோனா தொற்று அதிகரிப்பதை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனிடையே 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி எப்போது போடப்படும் என்ற கேள்வி எழுந்தது.

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது ?  தமிழக அரசு தகவல் !

ThangaveluBy : Thangavelu

  |  4 Aug 2021 6:07 AM GMT

கொரோனா தொற்று அதிகரிப்பதை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனிடையே 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி எப்போது போடப்படும் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், வயதுக்கு குறைவான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டத்தை வகுக்கக்கோரி நேர்வழி இயக்கம் என்ற ஒரு அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், முன்னுரிமை அடிப்படையில் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என்று அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

மேலும், உயர்நிலை பள்ளிகளில் படிக்கின்ற 18 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது பற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் சார்பில் இதுவரை எந்த ஒரு வழிகாட்டுதல்களையும் வழங்கவில்லை என்று கூறப்பட்டது.

இது பற்றி இந்திய மருத்துவ ஆய்வு கழகம் வழிகாட்டுதல் வழங்கியபின்னர், பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று கூறப்பட்டது. இதனை கேட்டுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 12ம் தேதி தள்ளி வைத்தனர்.

Source: News7

Image Courtesy: DNA India

https://news7tamil.live/soon-vaccinate-to-school-children-government-of-tamil-nadu.html

Next Story
கதிர் தொகுப்பு
Trending News