கோவில் கட்டண முறைகேடு குறித்து புகார் கொடுக்க சென்ற நீதிபதியிடம் கடுமையாக நடந்த அதிகாரி!
கோவில் கட்டண முறைகேடு குறித்த உரிய புகாரை அளிக்க சென்ற நீதிபதியிடம் கடுமையாக நடந்த கோவில் ஊழியர்கள்.
By : Bharathi Latha
சென்னை வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு தரிசன டிக்கெட் கட்டண முறைகேடு குறித்து செயல் அலுவலரிடம் புகார் அளிக்க சென்ற உயர் நீதிமன்ற நீதிபதியிடம் கடுமையாக நடந்து கொண்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் என்பவர் கடந்த பதினேழாம் தேதி மாலை தனது மனைவி மற்றும் மகளுடன் வடபழனி உள்ள முருகன் கோவிலுக்கு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் சாமி தரிசனம் செய்வதற்கு சென்று இருக்கிறார். அங்கு தல ₹ 50 வீதம் 150 செலுத்தி மூன்று பேருக்கு சிறப்பு தரிசன டிக்கெட் வழங்கும் படி கூறியுள்ளார். அப்போது அங்கு டிக்கெட் கொடுக்கும் பணியில் இருந்த ரேவதி என்ற பெண் பணியாளர், இரண்டு ரூபாய் 50 டிக்கெட்டுகள், ஒரு 5 ரூபாய் டிக்கெட்டை வழங்கியுள்ளார்.
இதைப் பார்த்து நீதிபதி இது தொடர்பாக அந்த பெண்ணிடம் முறையிட்டு இருக்கிறார். உடனடியாக அந்த பெண் மறுத்து பேசாமல், ரூபாய் ஐந்து டிக்கெட்டை திரும்ப பெற்றுக் கொண்டு 50 டிக்கெட் வழங்குவதை அருகில் நின்று கண்காணித்து இருக்கிறார். அவருக்கு 50 ரூபாய் டிக்கெட் பதிலாக ஐந்து ரூபாய் டிக்கெட் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. அந்த டிக்கெட்டுகளை சரிபார்த்து வரிசையில் சுவாமி தரிசனத்திற்காக உள்ளே அனுப்பும் ஊழியர் ரவிச்சந்திரன் என்பவர் அதனை கண்டு காணாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சுவாமி தரிசனம் முடித்துக் கொண்டு இந்த முறை கேட்டு தொடர்பாக கோவில் செயல் அலுவலர் உள்ள இடம் புகார் அளிக்க மனைவி மற்றும் மகளுடன் செயல் அலுவலகத்திற்கு சென்ற நீதிபதியிடம், ஊழியர்கள் கடுமையாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்து உயர்நீதிமன்ற நீதிபதி உடனடியாக போலீஸ் அங்கு வந்து பிறகு குடும்பத்தினருடன் வந்திருப்பது உயர் நீதிமன்ற நீதிபதி என்பது கோவில் ஊழியர்களுக்கு தெரியவந்தது. ஊழியர்கள் தரிசன கட்டணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பணம் குறைத்து தனது பணத்தை அதற்காக வழங்க நேரிட்ட காரணத்தால் அதை ஈடுகட்டும் விதமாக இவ்வாறு டிக்கெட் வழங்கியதாக கூறியிருக்கிறார்கள். உயர்நீதிமன்றம் தற்போது உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. கோவில் ஊழியர்கள் ஐந்து பேரை பணியிடை நீக்கம் செய்து செயல் அலுவலர் நடவடிக்கை எடுத்ததாகவும் தற்போது கூறப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Indian Express