Begin typing your search above and press return to search.
வைகை அணையில் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு.!
விவசாய பாசன வசதிக்காக வைகை அணையிலிருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
By : Thangavelu
விவசாய பாசன வசதிக்காக வைகை அணையிலிருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஜூன் 4ம் தேதி முதல் 120 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பாசன வசதிக்காக வினாடிக்கு 6,739 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்படும். அதேபோன்று ஜூன் 4ம் தேதி முதல் அடுத்த வருடம் 28ம் தேதி வரை பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி, சித்தார் முதல் 2ம் அணைகள் திறக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story