Kathir News
Begin typing your search above and press return to search.

என்னாது ஸ்வீட் எல்லாம் டால்டாவில் செஞ்சோமா? ஆவின் கொடுத்த விளக்கம்!

என்னாது ஸ்வீட் எல்லாம் டால்டாவில் செஞ்சோமா? ஆவின் கொடுத்த விளக்கம்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Oct 2022 7:09 AM IST

ஆவின் இனிப்பு வகைகள் நெய்க்கு பதிலாக டால்டாவை பயன்படுத்தி தயாரிக்கப்படுவதாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்திக்கு ஆவின் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆவின் ஸ்வீட் அனைத்தும் அக்மார்க் தரம்பெற்ற ஆவின் நெய்யினால் சுகாதாரமான முறையில் எவ்வித வேதி பொருட்களும் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்டு நவீன தொழில்நுட்ப முறையில் பேக் செய்து விற்பனை செய்யப்படுகிறது.

ஆவின் ஸ்வீட் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பான மற்றும் ஆவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற உண்மைக்கு புறம்பான உள்நோக்கமுடைய அவதூறுகளை ஆவின் நிர்வாகம் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும்.

மேலும், ஆவினால் அமர்த்தப்படும் தனியார் பாலகங்களுக்கு, அவர்கள் அளிக்கும் தேவை பட்டியலுக்கேற்ப தீபாவளி சிறப்பு இனிப்புகள் அவர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எவ்வித கட்டாயமோ, நெருக்கடியோ அவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Input From: Hindu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News