கூட்டணிக் கட்சிகள் உறவைப் பற்றி பேசிய திருமாவளவன்.. தகுந்த பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன்..
தமிழகத்தில் பாஜகவை தூக்கி சுமக்கும் கூட்டணி கட்சிகள் குறித்து பேசிய திருமாவளவன், அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் வானதி சீனிவாசன்.
By : Bharathi Latha
தற்போது நடைபெற்று முடிந்த கர்நாடக தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இது பற்றி கூறும் பொழுது, இந்தியா முழுவதும் பாஜக முற்றிலும் தகர்த்து எரியப்படும் என்று நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. இதே நேரத்தில் தமிழகத்திலும் பாஜகவை தூக்கி சுமக்கும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் தங்களுடைய கூட்டணி உறவுகளைப் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்.இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ அவர்கள் இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் கூறுகிறார். இது பற்றி அவர் கூறும் பொழுது, மற்ற கட்சிகளுக்கு ஆலோசனை கூறுவதற்கு முன்பு தான் சார்ந்து இருக்கும் கூட்டணி கட்சியில் எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறி இருக்கிறதா? என்பதை திருமாவளவன் எண்ணி பார்க்க வேண்டும்.
சமூக நீதிக்காக குரல் கொடுத்த திருமாவளவன் இரண்டு ஆண்டு காலமாக திமுக ஆட்சியில் சமூக நீதி பாதுகாக்கப்பட்டுள்ளதா? வேங்கை வயல் சம்பவமும், தொடரும் ஆவணக் கொலைகளும், தூய்மை பணியாளர்கள் பிரச்சினைகளும் சமூக நீதியின் அடையாளங்களா? ஆதிதிராவிடர், பட்டியல் இன மக்கள் என தலைவர்களுக்கான ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான நிதியை கூட திமுக அரசு செலவழிக்க வில்லையே. பட்டியலிட ஒருவரை துணை முதல்வராக வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்தி வருகிறோம். ஆனால் அதைக் கேட்க கூட இல்லை. ஆனால் பாஜக அரசு பட்டியல் இன மக்கள், பழங்குடியினத்தை சேர்ந்த பலரும் எம்.பிக்களாக இருக்கிறார்கள்.
முக்கிய பொறுப்புகளிலும் இருக்கிறார்கள். தமிழகத்தில் அருந்ததியினர் சமூகத்தை சேர்ந்தவருக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. மாநில தலைவர் பதவியும் வழங்கி இருக்கிறோம். இது இப்போது மட்டும் அல்ல, எப்போதும் பாஜகவில் கடைபிடிக்கப்படும் சமூக நீதி. நீதி காக்கப்பட வேண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று அக்கறை இருந்தால் திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து விலகி, சமூக நீதியை உண்மையாகவே கொண்டாடுகின்ற உண்மை கட்சியான பாஜகவில் கூட்டணிக்கு வர வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
Input & Image courtesy: Maalaimalar