வண்டலூர் பூங்காவில் மற்றொரு சிங்கத்தின் உடல்நிலை மோசம்.. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை.!
சென்னை அடுத்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் 10 சிங்கங்களுக்கு கடந்த 3ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அன்றைய நாளே நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் தொற்றால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது.

By : Thangavelu

இதனை தொடர்ந்து உடனடியாக மற்ற சிங்கங்கள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டு, கால்நடை மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தது. மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கவிதா, புவனா ஆகிய 2 பெண் சிங்கங்களின் உடல் நிலையும் கவலைக்கிடமாக இருந்தது. அதனை காப்பாற்றும் முயற்சியில் மருத்துவர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட 2 பெண் சிங்கங்களின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளது. மேலும், ஒரு சிங்கத்தின் உடல்நிலையும் மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சிங்கத்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மனிதர்களை அழித்து வரும் கொரோனா தொற்று தற்போது விலங்குகளையும் தாக்கி வருவது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.