வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி.!
போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி, தமிழக அரசை விளக்கமளிக்க சொல்லி வழக்கை ஒத்திவைத்தனர்.
By : Thangavelu
வன்னியர்களுக்கு தமிழக அரசு பணியில் 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மிகவும் பெரும்பான்மையான மக்களாக வன்னியர் சமூதாயத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் மிகவும் குறைந்த அளவிலான இடஒதுக்கீடு மட்டுமே இருந்து வந்தது.
இதனையடுத்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வன்னியர்களுக்கு வேலை வாய்ப்பில் 20 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். அதன் பின்னர் பல கட்டம் போராட்டங்களை முன்னெடுத்தார்.
இதனிடையே கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசு வேலை வாய்ப்பில் 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கான மசோதாவை நிறைவேற்றினார். இதற்கான ஒப்புதல் கோப்பில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கையெழுத்திட்டார். இதனையடுத்து அந்த மசோதா சட்டமாக்கப்பட்டது.
இதனை எதிர்த்து திண்டுக்கல்லைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, உரிய நடைமுறைகளை பின்பற்றிய இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே தேர்தல் ஆதாயத்திற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள், போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி, தமிழக அரசை விளக்கமளிக்க சொல்லி வழக்கை ஒத்திவைத்தனர். அதே போன்று மதுரையை சேர்ந்த அபிஷ்குமார் என்பவர் வன்னியர் உள்ஒதுக்கீட்டை ரத்துசெய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த சட்டத்தை ரத்து செய்ய நீதிபதிகள் மறுத்து விட்டனர். இது பற்றி பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் வன்னியர் உள்ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்கு பல்வேறு வகையில் முயற்சி செய்து வருகிறார். ஆனால் அவரது அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளது.