Kathir News
Begin typing your search above and press return to search.

அவினாசி அருகே பராமரிப்பின்றி இருக்கும் வரதாரஜ பெருமாள் கோயில்: கண்டு கொள்ளுமா இந்து சமய அறநிலையத்துறை?

திருப்பூர் மாவட்டம், அவினாசி ஒன்றியம் நடுவச்சேரி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரிவரதராஜப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம்.

அவினாசி அருகே பராமரிப்பின்றி இருக்கும் வரதாரஜ பெருமாள் கோயில்: கண்டு கொள்ளுமா இந்து சமய அறநிலையத்துறை?
X

ThangaveluBy : Thangavelu

  |  15 Nov 2021 10:34 AM GMT

திருப்பூர் மாவட்டம், அவினாசி ஒன்றியம் நடுவச்சேரி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரிவரதராஜப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம்.

ஆனால் தற்போது கோயில் சுவற்றின் இரண்டு புறமும் ஆலம் மற்றும் அரச மரங்களை இந்து சமய அறநிலையத்துறை வளர்த்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறையானது தற்போது கோயிலை சிதைக்கின்ற நோக்கில் மரங்களை வளர்த்து வருகிறதா என்ற ஐயம் பக்தர்களிடம் எழுந்துள்ளது.

இதன் பின்னர் அவினாசி வட்டாட்சியர் மற்றும் கோயில் தக்கார் சந்திரமோகன் தலைமையில் ஒரு சமாதான கூட்டத்தை நடத்தியுள்ளனர். அதில் கோயிலின் மேல் மற்றும் இருபுறமும் உள்ள அரச, ஆல மரங்களை அகற்றுவதற்கு உத்தரவு பிறப்பித்து அதனை செயல்படுத்தாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கோயிலின் சுவர்கள் இடிந்து விழும் நிலைமையில் உள்ளதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், கோயில் சுவர்கள் சேதமடைந்து காணப்படுகிறது. அது மட்டுமின்றி மரங்களை உடனடியாக அகற்றி கோயிலை பராமரிக்கவில்லை எனில் இடிந்து விழுந்துவிடும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உடனடியாக இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று பக்தர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News