Kathir News
Begin typing your search above and press return to search.

வாசன் ஐகேர் அருண் தற்கொலை? சிதம்பரத்தின் சொத்துக்களை பற்றி அறிந்தவர்.!

வாசன் ஐகேர் அருண் தற்கொலை? சிதம்பரத்தின் சொத்துக்களை பற்றி அறிந்தவர்.!

வாசன் ஐகேர் அருண் தற்கொலை? சிதம்பரத்தின் சொத்துக்களை பற்றி அறிந்தவர்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Nov 2020 6:45 AM GMT

இந்தியா முழுவதும் சுமார் 170 கிளைகளுடன் இயங்கி வரும் வாசன் ஐ கேர் குழுமத்தின் தலைவர் அருண் இன்று இறந்த சம்பவம் அவர் குடும்பத்தில் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

40 வயதில் வாசன் ஐ கேர் என்ற பெயரில் திருச்சியில் கண் மருத்துவமனையை தொடங்கிய அருண், அடுத்த 10 வருடங்களில் இந்தியா முழுவதும் தனது கிளைகளை படபடவென பரவச் செய்தார்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் வலதுகரமாக திகழ்ந்த அருணுக்கு கடந்த சில வருடங்களாக நிதி நெருக்கடி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

கரூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எம்.பி.யாக இருந்த முருகையா என்பவரின் மகன் தான் இந்த அருண். வாசன் குரூப் என்ற பெயரில் திருச்சியில் முருகையா குடும்பத்தினருக்கு சொந்தமாக ஏராளமான சொத்துக்கள் உள்ளது. திருச்சி கரூர் சாலையில் ஏபிசி ஹாஸ்பிடல் என்ற மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை நிறுவிய அருண், கண் மருத்துவத்திற்கென பிரத்யேகமாக வாசன் ஐ கேர் என்ற மருத்துவமனையை 2008-ம் ஆண்டு முதன் முதலாக தொடங்கினார்.

ப.சிதம்பரத்திற்கு ஆல் இன் ஆலாக திகழ்ந்த அருணின் வளர்ச்சி அடுத்த சில வருடங்களில் ஆலமரம் போன்று பெருகியது. ஒரு சமயத்தில் கண் மருத்துவமனையை திறந்து வைக்க அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை அழைத்து வரும் அளவுக்கு அருணின் செல்வாக்கு உயர்ந்திருந்தது என்றால் அனைவரையும் புருவம் உயரச்செய்துள்ளது என்று சொல்லலாம்.

இந்தியா முழுவதும் சுமார் 170 கிளைகளில் வாசன் ஐ கேர் செயல்பட்டு வரும் நிலையில் மாதம் ஒன்றுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வரவு செலவு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 8 மணியளவில் அருணுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து அவர் உடனடியாக காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது என கூறப்படுகிறது. ஆனால் அவர் மாரடைப்பால் இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பன பற்றி உரிய விசாரணை மேற்கொண்டால்தான் தெரியும்.

அருண் கடந்த சில மாதங்களாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கி வந்துள்ளதாகவும், இதன் காரணமாக சில மாதங்கள் அவர் வெளிநாடுகளில் தங்கியிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தகாலத்தில் திருச்சி வந்தால் அவருக்கு அருண் வீட்டில் இருந்து தான் உயர்ரக கார் அனுப்பி வைக்கப்படும். ப.சிதம்பரத்தின் சொத்து விவரங்கள் குறித்து அருண் ஓரளவுக்கு தெரிந்து வைத்துள்ளார். இன்று கார்த்தி சிதம்பரத்தின் பிறந்தநாளில் அருண் மறைந்திருப்பது ப.சிதம்பரம் தரப்பிற்கு மிகுந்த அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News