ஸ்டெர்லைட் ஆலை மூடலுக்கு பின்னால் இவ்வளவு மர்மங்களா... புழங்கும் வெளிநாட்டு நிதி... பின்னணி என்ன?
ஸ்டெர்லைட் ஆலையை மூட போராட்டம் நடத்திய 'தி அதர் மீடியா' வெளிநாட்டு நிதியை தவறாக பயன்படுத்தி உள்ளது.
By : Bharathi Latha
தமிழகத்தில் வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்திய 'தி அதர் மீடியா’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வெளிநாட்டு நிதியுதவிச் சட்டங்களை மீறியதாக சில புகார்கள் கிடைத்துள்ளதாக மத்திய அரசு நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி நாரன்பாய் ஜே.ரத்வாவின் கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் அளித்து இருக்கிறார்.
குறிப்பாக அவருடைய பதிவில் கூறுகையில், "வெளிநாட்டு பங்களிப்பு விதிகளை மீறுவதாகக் குற்றம் சாட்டப்படும்(FCRA, 2010), 'தி அதர் மீடியா, வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதிகளை தவறுதலாக பயன்படுத்தி இருப்பது தெரியவந்து இருக்கிறது. குறிப்பாக நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் திட்டங்களில் வெளிநாட்டு நிதிகளை பயன்படுத்தி அவற்றை அடியோடு தடுத்து இருப்பதற்கு இத்தகைய நிதி பயன்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி 100வது நாள் நடந்த போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகியதைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்கும் ஆலை, கடுமையான மாசுபாட்டை ஏற்படுத்தியதாகக் கூறி 2018 மே மாதம் மூடப்பட்டது.
தமிழகத்தில் தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதற்காக ‘தி அதர் மீடியா’ மீது நிதியை தவறாக பயன்படுத்தியதாக அமைச்சகத்திற்கு புகார்கள் வந்துள்ளதா? என்றும், அதற்கு கிடைத்த நிதி விவரங்கள் குறித்தும், நடவடிக்கை எடுக்கப்படுமா? என்றும் காங்கிரஸ் MP ரத்வா கேட்டிருந்தார். மேலும் இது குறித்து மத்திய அமைச்சகம் சார்பில் அவர் குறிப்பிடுகையில், FCRA மீறல்கள் பற்றிய புகார்கள் உண்மை என தெரிய வந்தால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார்.
Input & Image courtesy: News